கண்டி நகரில் அமைந்துள்ள NSB வங்கி கிளையில் நிக்காப் அணிந்து முஸ்லிம் பெண் போன்று உடையணிந்த நபரொருவர் வங்கியை கொள்ளையிட முற்பட்டதாக தெரிவித்து வங்கி ஊழியர்களினால் பிடிக்கப்பட்டுள்ளார். இவர் தன்னுடன் கைத் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.
நிக்காப் அணிந்து முஸ்லிம் பெண் போன்று உடையணிந்த குறித்த நபர் பெரும்பான்மை சமூக்கதை சேர்ந்தவர் என்று அறியமுடிகிறது. இந்த சம்பவம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கடும்போக்கு பெளத்த இயக்கம் ஒன்று நிக்காப் உடைக்கு எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .
