அப்சல்குருவிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டது!



2001-ல் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குரு இன்று காலை  திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததைத் தொடர்ந்து உடனடியாக தூக்கிலிடப்பட்டான்.

தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து திகார் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 7:56 மணிக்கு அப்சல் குருவுக்கு தண்டனையை நிறைவேற்றியதாக சிறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ள போதிலும், அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தகவலை மத்திய அரசு உடனடியாக உறுதிப்படுத்தவில்லை




ஜனவரி இறுதியில் மனு நிராகரிக்கப்பட்ட தகவலையே மத்திய அரசு இன்றுதான் வெளியிட்டது. நாடாளுமன்றம் மீதான தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவே அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2001 டிசம்பர் 13-ம் தேதி நாடளுமன்றம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.


அன்று நாடாளுமன்றத்திற்குள் காரில் வந்த 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த 5 தீவிரவாதிகளுக்கும் உதவிய புகாரின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post