சட்டவிரோதமாக
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில்
பாதிப்புக்குள்ளான 26 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இந்தோனேசிய கடலோர காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்தோனேசியாவுக்குட்பட்ட 'திடத்" தீவில் 12 நாட்கள் இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு
மீட்கப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட
நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இந்தோனேசிய குடிவரவு அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 17 ஆண்களும், 4 பெண்களும் 5 சிறார்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த
இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற ஆட்கடத்தற் காரர்கள், படகு
விபத்துக்குள்ளான நிலையில், பயணிகளை நிர்கதியாக விட்டுவிட்டு
தப்பிச்சென்றுவிட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
