ராமேஸ்வரத்தில் இலங்கையர் ஒருவர் கைது.

விசா முடிந்த நிலையில் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் ராமேஸ்வரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமது விசா காலம் நிறைவடைந்த நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் தமிழகத்தில் தங்கியிருந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்தவர் ஸ்ரீPராம் என்பவதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று நாள் விசாவில் சென்னை சென்ற இவர் தமது விசா காலம் முடிந்த நிலையிலும், சினிமா  நடிகராகும் ஆசையில், சென்னையில் தொடர்ந்து தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமது தாயாரை காண, இலங்கை வர முயற்சித்த வேளையிலேயே மண்டபம் கரையோர காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார்.
ராமேஸ்வரம் காவல்துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post