சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹலால் விவகாரம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது ஹலால் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த கடும்போக்காளர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் முஸ்லிம் அமைப்புகளால் கையளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் 'விடிவெள்ளி'க்கு கருத்து வெளியிட்ட முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் இக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை நாளை அகில இலங்கை ஜம்இய்யல் உலமா ஊடகங்களுக்கு வெளியிடும் என்றார்.
இச் சந்திப்பில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
நன்றி : விடிவெள்ளி
