நாட்டில் ஹலால் விவகாரமானது உண்மையிலேயே பிரச்சினையை தோற்றுவித்திருக்கக்கூடிய ஒரு விடயம் தான் என தெரிவித்துள்ள அமைச்சரவையின் ஊடகப்பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல அந்த விடயத்தினை மிகக்கவனமாக கையாண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இன்று ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமது மதத்தினை பின்பற்றும் உரிமையும் சுதந்திரமும் ஒவ்வருவருக்கும் உள்ளது. அதே நேரம் நாட்டினுடைய சட்ட திட்டங்களையும் பேணவேண்டிய கடப்பாடும் உள்ளது.
இதனடிப்படையில் ஹலால் விவகாரமானது உண்மையிலேயே பிரச்சினையை தோற்றுவித்திருக்கும் ஒரு விடயம் தான். இது தொடர்பில் அரசு மிகக் கவனமாக ஆராய்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
நன்றி : விடிவெள்ளி
