நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவுகளில் பன்றி கறியையும் வழங்கலாம் என கடந்த வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்தே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேட சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலாக மகஜரொன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் விரைவில் கையளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பன்றி இறைச்சியினால் சமைக்கப்பட்ட கறிகள் ஏனைய கறிகளுடன் கலந்துவிடக்கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார்.
இதனால், நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவுகள் உண்பதை நான் தவிர்த்துக்கொண்டுள்ளேன். என அவர் குறிப்பிட்டார்.
என்னைப் போன்று ஏனைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிற்றுண்டிச்சாலையில் உணவுகள் உண்பதை தவிப்பார்கள் என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்
பன்றி இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமதுரங்க கடந்த நவம்பர் மாதம் சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் அதாவுல்லா உட்பட அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்ளும் பன்றி இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்குள் அனுமதிக்க வேண்டாம் என கையொழுத்திட்டு சபாநாயகருக்கு கடிதமொன்றை கையளித்தனர்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவுகளில் பன்றி கறியையும் வழங்கலாம் என நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சபை அலுவல்கள் குழு கூட்டத்திலே எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரங்கவே இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.
எனினும் இந்த கோரிக்கைக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.ஏம் அஸ்வர் மற்றும் பிரதி அமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தன ஆகிய இருவருமே கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Weldon mr speaker , you can feed them pork curry
ReplyDeletebecause only pork curry they haven't tasted , all other work they have don