ஹலால் சான்றிதழ்கள் மூலம் பெறப்படும் நிதி பயங்கரதிகளுக்கு வழங்கப்படுகின்றது என்று பொதுபலசேனாவின் குற்றச்சட்டுகளை முறியடிக்கும் வகையில் அது தொடர்பான கணக்கறிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவ்வறிக்கைகளை ஆராய்ந்து பாதுகாப்பு அமைச்சு விரைவில் தமக்கு உரிய பதிலை வழங்கும் என்றும் உலமா சபையின் ஹலால் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் நிதி அல்கைதா மற்றும் தலிபான் போன்ற இயக்கங்களுக்கு அனுப்பப்படுவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உலமா சபை, கணக்கறிக்கைகளை பரிசீலிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரகசியப் பொலிஸாருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையினை பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட விஷேட குழு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : விடிவெள்ளி
