முஸ்லிம்களின் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கான தேவை ஜனாதிபதிக்கு இல்லை -ஓடியோ



கடந்த சில மாதங்களாக முஸ்லிம் மக்களை இலக்குவைத்து தனது  நடவடிக்கைகளை  முன்னெடுக்கும் பொதுபலசேனா என்ற அமைப்பு மிகவும் பயங்கரமானது  என  ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மத வாதத்தினை தூண்டி மக்களிடையே பிரச்சினையக் ஏற்படுத்த முனையும் இந்த பொதுபலசேனா அமைப்புக்கு அரசாங்கம் ஆதரவாக இருப்பதாகவும், அவர்களுக்கு சில சலுகைகளை அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பொதுபலசேனா அமைப்பின் செயற்பாடுகள் ஜனாதிபதி அவர்களுக்கு ஆதரவாகவே நடைபெறுகிறது. ஜனாதிபதி அவர்களும் பல சலுகைகளை அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதேபோல் ஜம்இய்யதுல் உலமா அமைப்புடனும் ஜனாதிபதி மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். 

அனால் ஜனாதிபதி பொதுபலசேனாவை  பகலில் ஜனாதிபதி  மாளிகைக்குஅழைத்து பேச்சுவார்த்தை நடாத்துவார், இரவில் ஜம்இய்யதுல் உலமாவை ஜனாதிபதி  மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடாத்துவார். பகலில் பொதுபலசேனாவிற்கு  ஜனாதிபதி கூறுவார் நீங்கள் ஹலாலுக்கு எதிராக போராடுங்கள் என்றும். இரவில்  ஜம்இய்யதுல் உலமாவிற்கு  நீங்கள் ஹலாலை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று கூறுவார்.

உண்மையில் ஜனாதிபதிக்கு தேவையாக இருந்தால் இந்த இரண்டு அமைப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி இந்த பிரச்சினையை தீர்த்துவைக்க முடியும். அனால் ஜனாதிபதிக்கு இந்த பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கான தேவை இல்லை என அவர் மேலும் தெரிவித்தார் 

அவரது செவ்வி : (நேர்காணல் : ஊடகவியலாளர் இர்பான் இக்பால்)

Post a Comment

Previous Post Next Post