(ஊடகவியலாளர் இர்பான் இக்பால்)
தம்புள்ளை விவகாரம் முதல் இன்றைய பொதுபல சேனாவின் பேரெழுச்சி வரை அத்தனைக்கும் பின்னால் அரசாங்கமே செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் அஸாத் சாலி.
அமைச்சர்களைக் கைப்பொம்மையாகப் பாவிப்பதுடன் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டுவதில் ஜனாதிபதி ராஜபக்சவே முக்கிய பங்கு வகிப்பதாகவும் தன்னோடு தனிப்பட்ட ரீதியில் அவர் தம்புள்ளை விவகாரத்தின் போதே இனவாதத்தைக் கக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜம் இயத்துல் உலமாவையும் தன் கைப்பாவையாக மாற்ற முனையும் ஜனாதிபதி கிட்டத்தட்ட அகில இலங்கை ஜம் இயத்துல் உலமாவின் “இமாமாக” செயற்படுவதாகவும் கருத்து வெளியிட்டுள்ள அவர் முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையில்லாமையும் அதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவதையும் ஒப்புக்கொண்டதோடு ஆணித்தரமான முன்னெடுப்புகள் பின் தங்கியே இருப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுபலசேனவுடனான டி.என்.எல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அஸாத் சாலி பங்கு கொள்ளக்கூடாது என்று அவ்வமைப்பு தெரிவித்ததாக அதே தினம் எமக்குக் கிடைத்த செய்தியை (பார்க்க: பொதுபல சேனவுடன் நேருக்கு நேர் !) உறுதி செய்த அவர் சமூகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களோடு இன்றைய உண்மையான அரசியல் நிலைமையையும் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் தெரிவித்துள்ளார்.
அவரது செவ்வி :
