இஸ்ரேல் நாட்டின் உயர்விருது 'அதிபர் உயர்தரப் பதக்கம்' (ஆங்கிலத்தில் Presidential Medal of Distinction) அமெரிக்க அதிபர் பராக் ஹூசேன் ஒபாமாவுக்கு வழங்கப்பட உள்ளது.
இஸ்ரேலை பலப்படுத்தவும் அந்நாட்டு மக்களை பாதுகாக்கவும் ஒபாமா வழங்கி வரும் பங்களிப்பை கருத்தில் கொண்டும், நட்புறவை பாராட்டியும் ஒபாமாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக இஸ்ரேலின் அதிபர் ஷிமோன் பேரெஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்றிருக்கும் பாரக் ஒபாமா, மார்ச் மாதம் இஸ்ரேல் நாட்டிற்கு வருகை புரியும் போது அவருக்கு இவ்விருது வழங்கப்படுமென தெரிகிறது.
பிரான்ஸ் நாட்டின் 'லெஜியன் ஆஃப் ஹானர்', கனடாவின் 'ஆர்டர் ஆஃப் கனடா' போன்ற விருதுகளை போன்ற உயரிய விருதுகளுக்கு இணையானதாக இஸ்ரேலின் இந்த விருது கருதப்படுகிறது.
Tags
உலகச் செய்திகள்
