முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென
அதிகார சபையின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம தெரிவித்துள்ளார்.
இந்த இரசாயனம் அடங்கிய மருந்து வகைகளை அருந்திய பாகிஸ்தானின் லாகூர்
மற்றும் குஜரன்வாலா ஆகிய பிரதேசங்களில் சுமார் 60 பேர் வரையில்
உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிவுறுத்தலை
கருத்திற்கொண்டு இலங்கையில் அந்த மருந்து வகையை பாவனையிலிருந்து
நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படுகின்ற இருமலுக்கான பானி மருந்துக்கு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டெக்ஸ்ட்ரோமெத்தொஃப்
(Dextromethorp) எனும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட குறித்த மூலப் பொருளுடன் லிவாமெத்தொஃபன் என்ற நச்சுத் தன்மை
வாய்ந்த இராசாயனம் கலந்திருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இரசாயனப் பதார்த்தத்தை உள்ளீடாக கொள்ளாத இருமலுக்கு
பயன்படுத்தப்படுகின்ற மேலும் பல பானி மருந்துகள் சந்தையில் காணப்படுவதால்
புதிய தீர்மானத்தால் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது எனவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.