கையடக்க தொலைபேசிக்கான கட்டண கணக்கை மீள் நிரப்புவதற்கான அட்டையை பெற்றுக்கொண்டு 1000 ரூபா கள்ளநோட்டை கொடுத்து விட்டு தலைமறைவாகியுள்ள பிக்குவை தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
இந்த சம்பவம் அம்பாறை இங்கினாகல பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கையடக்க தொலைபேசி கட்டணங்களை மீள்நிரப்பும் தொலைபேசி நிலையத்தின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த சந்தேகநபர் அம்பாறையிலுள்ள விஹாரையில் இருந்தவர் என்று தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நன்றி : விடிவெள்ளி இணையம்
