(ஜுனைத் நஸீர்)
ஒலுவில் கடற்பரப்பில் உயிருக்காக போராடி கரை சேர்ந்த மியன்மார் மற்றும்பங்களாதேஷ்யை சேர்ந்த 139 பேரில் சிறுவர் பெண்கள் உற்பட 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இவர்களை நேரில் சென்று பார்வையிட்ட இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்ற சமுக சேவை பிரிவினர், இவர்களுக்கு மிக அவசரமாகத் தேவைப்பட்ட அத்தியவசிய மற்றும் உலர் உணர்வுப்பொருட்களை விநியோகித்து உதவிபுரிந்தனர்.



