TNL நிகழ்ச்சிக்கும் ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் தொடர்பில்லை! உண்மையான நிலைப்பாடு என்ன?


சென்ற 12-02-2013 TNL தொலைக்கட்சி நிகழ்ச்சிக்கும் ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் தொடர்பில்லை

ஜம்இய்யத்துல் உலமாவின் உண்மையான நிலைப்பாடு என்ன?
(நேர்காணல் : ரீ. ஹைதர் அலி அல்-ஹலீமி)


-அ.இ.ஜ.உ வின் தலைமை உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஆதம் அலி-

பொது பல சேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பு தமது பிரச்சாரத்தை ஆரம்பித்த நாள் முதல் அ.இ.ஜ.உலமாவின் மீது மக்களின் முழக் கவனமும் திரும்பியது. இந்தப் பொய்ப் பிரச்சாரங்களுக்கான திருப்திகரமான பதில்களை இவர்கள் கொடுப்பார்கள் என்றதொரு மிகப் பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பு மேற்படி நிகழ்ச்சிக்குப் பின் மிகப்பெரிய ஆத்திரத்தையும், ஜம்இய்யாவின் மீதிருந்த நம்பிக்கையையும் இழக்கச் செய்தது. ஏந்த அளவுக்கெனில் ஜம்இய்யாவின் மீது மிகவும் பற்றுக் கொண்ட ஆலிம்கள் கூட இணையங்களிலும் வேறு பல ஊடகங்களின் மூலமும் தமது அதீத அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

நானும் அ.இ.ஜ.உலமாவின் மிக நெருங்கிய ஒரு அங்கத்தவர் என்ற வகையிலும், பல உப குழக்களின் அங்கத்தவர் என்ற வகையிலும் மிகவும் அதிதிருப்தியோடும், ஆத்திரத்தோடும் தலைமையகம் சென்று அதன் பொதுச் செயலாளர், நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள், தலைமையதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களுடன் ஒன்றுகூடி மேற்படி ரீ.வி நிகழ்ச்சி பற்றியும், ஜம்இய்யா ஏன் இந்த பொது பல சேனா அமைப்புடன் நேரடியாக சந்திக்க அச்சப்படுகிறது எனவும் விசாரித்தேன். அதற்கு அவர்களின் பதிலும் நிலைப்பாடும் கீழ்வருமாறு அமைந்திருந்தது.

கேள்வி:
ஏன் நீங்கள் குறிப்பிட்ட மூன்று சகோதரர்களையும் அந்நிகழ்ச்சிக்கு அனுப்பினீர்கள்?
  
பதில்:
உண்மையில் அந்நிகழ்ச்சிக்கு நாம் அவர்களை அனுப்பவில்லை. அது தொடர்பாக எமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்றவர்கள் உண்மையில் சமூக நோக்கோடு தம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்தனர்.

ஆனால் அந்நிகழ்ச்சிக்கு  எமக்கு அழைப்பு வந்நது. ஆதனை நாம் முடியாது எனச் சொல்லி விட்டோம்.

கேள்வி:
ஏன் நீங்கள் இந்த சந்தர்பத்தைத் தட்டிக் கழித்தீர்கள். நாட்டு மக்கள் பல வார காலமாக இந்நிகழ்ச்சியினூடாக குறித்த பௌத்த அமைப்புடனான உங்கள் சந்திப்பை எதிர் பார்த்திருந்தனர். கடைசியில் அது ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

பதில்:
ஆம் நாம் இதனை மிக அறிவோம். ஆனால் இந்தப் பிரச்சினையை ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனைக்குப்பட்டவாறு சிந்திக்கின்றனர். குறித்த பிரச்சினையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட நாமும் இது எங்கிருந்து ஆரம்பித்தது. எங்கு நோக்கிச் செல்கிறது என்பதையும் நாம் அறிவோம். இந்தப் பிரச்சினைக்கு ரீ.வி. நிகழ்ச்சிக்கு மட்டும் நாம் சென்று வந்தால் போதும் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் ரீ.வி. நிகழ்ச்சிக்கு எம்மை அழைப்பதன் நோக்கமே இவர்கள் தெளிவு பெறுவதற்கு அல்ல. மாறாக வேறொரு உள் நோக்கம் இருக்கிறது. அத்துடன் கீழ்வரும் ஒவ்வொரு விடயங்களையும் கவனத்தில்கொள்ளவும் வேண்டும்.


1.நாம் நேரடி விவாதத்திற்கு செல்ல முன் (அவர்கள் பங்கு கொள்ளாமல்) எமக்கு மட்டும் தனிமையாக ஒரு நிகழ்ச்சியைத் தரும் படியும், அதற்கு அடுத்த வாரம் நாம் நேரடி விவாதற்திற்குத் அவர்களோடு அமரத் தயார் எனவும் பல தடவைகள் வேண்டிக் கொண்டும் குறித்த ரீ.வி நிறுவனம் அதனை மறுத்து நேரடி விவாதத்திற்கே அழைக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் சதித் திட்டத்தை நாம் கூறாமலே அறிந்துகொள்ள முடியும்.

2.அந்நிகழ்ச்சியை (பல தனவந்தர்களின் வேண்டுகோளின் பேரிலும்) பல இலட்சக் கணக்கான ரூபாக்கள் கொடுத்து ( Air Time ) பெற முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

3.எந்தவொரு அங்கீகாரமும் இல்லாத இந்த பொது பல சேனா அமைப்பினர் யார்? எம்மிடம் கணக்குக் கேட்க இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? இவர்களை நாம் எப்போதாவது தேசிய மட்டத்தில் இல்லாவிட்டாலும் சாதாரண ஒரு பொது விவகாரத்திலாவது ஈடுபட்டுள்ளதை கண்டிருக்கிறோமா? இந்நாட்டில் பொறுப்புள்ள எத்தனை பௌத்த அமைப்புக்களும், தலைமைகளும் இருக்கின்றனர். அவர்கள் மௌனமாக இருக்கும் போது இவர்களுக்கு நாம் பதில் சொல்லி நாம் எம்மையே தாழ்த்திக் கொள்ள வேண்டுமா?

4.இவர்களுக்கு உண்மையிலேயே சந்தேகங்கள் இருந்தால் அவைகளுக்கான முழு தெளிவுகளையும் நாம் பத்திரிகையாளர் மாநாடுகளின் மூலம் தெளிவு படுத்தி இருக்கிறோம். ஆனால் எம்மையே அழைப்பது வேறு நோக்கங்களுக்காகும்.

5.சரி ! எமது மக்கள் நினைப்பது போலவே நாம் இவைகளுக்கு பதில் சொல்ல நேரடியாகவே சென்று, இவர்களால் எமது உலமாக்கள் கேவலமாக நடாத்தப்படுவார்களானால் எமது சமூதாயத்தையே கேவலப்படுத்தியற்கு சமமாகும். மட்டுமன்றி அவர்களுக்கு இதுவே பெரிய வெற்றியாக அமைந்து விடும். எனவே தான் எமது சமூகத்தின் தூர நோக்கம் கொண்ட பல அறிஞர்கள், புத்தி ஜீவிகள் எக்காரணம் கொண்டும்  எம்மை அவர்களோடு நேரடி விவாதத்திற்குச் செல்ல வேண்டாம் என வேண்டிக்கொண்டிருக்கின்றனர். 

6.நாம் விவாதத்திற்குச் செல்லாததை குறித்த அமைப்பினர் தமக்குக் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய கேவலமாகவே கருதுகின்றனர். ஏனெனில் நாம் அவர்களின் கருத்துக்களுக்கு அந்த அளவுக்கு மதிப்பளிக்வில்லை என்பதே அதன் அருத்தமாகும்.

7.மேலும் எமது இந்தப் போக்கைக் கவனித்து கண்டி நான்கு நிக்காயாக்களின் பௌத்த மதத் தலைவர்கள் அஸ்கிரிய, மல்வத்த, அமரபுர மற்றும் ராமான்ய நிக்காயாக்களைச் சேர்ந்த மகா நாயக்கத் தேரர்கள் ஒன்றுபட்டு ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். இவர்கள் எம்மைச் சந்திக்க விரும்புவதாகவும் எமது கண்டி மாவட்டக் கிளையினூடாக அறியக் கிடைத்துள்ளது.

நாம் எந்தப் பிரச்சினையையும் ராஜதந்திர மூலமாகவே அனுக வேண்டியிருக்கிறது. எமது எல்லா நிகழ்ச்சி நிரல்களையும் மக்களுக்குச் சொல்ல முடியாது. சில செயற்பாடுகளை இரகசியமாகவும் மற்றும் சிலவற்றை பகிரங்கமாகவும் செய்யவேண்டியிருக்கிறது. எமது பல அறிக்கைகளை ஊடகங்கள் மறுத்திருக்கின்றன. 

எனவே நாம் எமது மக்களுக்குச் சொல்ல விரும்புவது யாதெனில் வீணான சந்தேகங்களைக் நீக்கி, எம்மை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி எமது உம்மத்தின் வெற்றிக்காக அல்லாஹ்விடம் பிரார்திக்க வேண்டும் என்பதேயாகும்.



2 Comments

  1. http://www.facebook.com/photo.php?v=2880431585127

    plz watch diz video and find him.. once u find kill him ...... datz wat i (we) need.....

    ReplyDelete
  2. above video link is an edited one.. dont be fools...

    ReplyDelete
Previous Post Next Post