தெமட்டகொடை இறைச்சி விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட பொது பல சேனா.


கொழும்பு தெமட்டகொடையில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தி இன்று காலை பொது பல சேனா அமைப்பினர் எதிர்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, இது தொடர்பில் ஆராய்வதற்கு உடன் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மிருக வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சட்ட ரீதியாகவே மாடுகள் அறுக்கப்பட்டு  விற்பனை செய்வதனை உறுதிப்படுத்தினர். அதனையடுத்து எதிர்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி : விடிவெள்ளி 

Post a Comment

Previous Post Next Post