(TM) ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஷரீயா சட்டத்தை அமுல்படுத்துவேன் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கலேவெலவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன்,மக்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்கின்றபோது கட்சி அமைப்பாளர்கள் முறையாக நடந்துக்கொள்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அக்குழு வழங்குகின்ற தீர்ப்புக்கு அமைய அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
.jpg)