ஹலால் தொடர்பிலான விசேட அறிவிப்பினை விடுக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாளை திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, வர்த்தக சம்மேளனம் மற்றும் பௌத்த தேரர்கள் ஆகியோரின் இணை ஏற்பாட்டிலேயே இந்த ஊடகவியலாளர் மாநாடு இடம்பெறவுள்ளது.
கொழும்பிலுள்ள சினமன் கிரேன்ட ஹோட்டேலில் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இந்த ஊடகவியலாளர் மாநாடு இடம்பெறவுள்ளது.
ஹலால் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்னும் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்பிக்காத நிலையிலேயே ஹலால் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை அறிவிக்கும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.
