மத அடிப்படை வாதிகளால் முரண்பாடு மாத்திரமே தோற்று விக்கப்படுகிறது -கம்புருகமுவ வஜிர தேரர்


(LM) மத அடிப்படை வாதிகளால் இன முறுகல் தோற்றுவிக்கப்படுவதாக, கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்துள்ளார். மதங்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்துவது தொடர்பான மாநாடு ஒன்று நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


மத அடிப்படைவாதிகள்  தமது ஆதிக்கங்களை நிலைநாட்ட ஏனைய மதங்களுடன்  முறுகல் நிலையை தோற்றுவிக்க முனைவதாக கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையின் அடிப்படை வாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அடிப்படைவாதிகள் மத ஒழுக்கங்களையும், மத தலைவர்களின் கருத்துக்களை பின்பற்றுவதில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களால் இனங்களுக்கு இடையில் முரண்பாடு மாத்திரமே தோற்றுவிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post