மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக 'எச்சரிக்கை' துண்டு பிரசுரம் விநியோகம்


(TM) மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் எச்சரிக்கை எனும் தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  அந்த துண்டு பிரசுரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவே விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த துண்டுப்பிரசுரங்களுக்கு திராவிட சேனை எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. மட்டக்களப்பு நகர் மற்றும் ஏறாவூர் உள்ளிட்ட பல பிரதேசங்களின் இந்த துண்டுபிரசுரங்கள்  விநியோகிக்கப்பட்டுள்ளன.குறித்த துண்டுபிரசுரத்தில்,

"இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகளின் வழிநடத்தலுடன் இலங்கையை எதிர்காலத்தில் இஸ்லாமிய நாடாக மாற்றும் திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்தானாக மாற்றுவது.இதனை அடிப்படையாக கொண்டு தமிழர் தாயக பூமியை கையகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழர்களின் வியாபார நிலையங்களை விலையாகவும் குத்தகைக்கும் பெற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயக பிரதேசத்தில் வியாபாரம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகளை உடன் வெளியேற்றுமாறு எமது அமைப்பு எச்சரிக்கின்றது.


அத்துடன் இந்த துரோகத்திற்கு துணைபோகும் தமிழ்கட்டிட உரிமையாளர்களே உங்கள் சொத்தை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது".

Post a Comment

Previous Post Next Post