மல்வானையிலும் ஹலால் எதிர்ப்பு போஸ்டர்கள்!


(இன்ஷாட் ஸூபைர்)
பொது பல சேனாவின் ஹலால் எதிர்ப்பு நடவடிக்கையும், இனவாதக் கருத்துக்களும் நாட்டின் நாலா பக்கங்களிலும் மிகத் தீவிரமாக பரவி வருகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற அசம்பாவிதங்கள் நம்மை கவலை கொள்ளச் செய்துள்ளன.

இது இவ்வாறிருக்க கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய நகரான மல்வானையிலும் ஹலால் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான உள்ளுர், வெளியூரை சேர்ந்த அனைத்து சமூகத்தவரும் ஒற்றுமையாக பணிபுரிகின்ற பியகம வர்த்தக வலயத்தை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறான போஸ்டர்களை காணக்கூடியதாக உள்ளது.

இதுவரை காலமும் பெரும்பான்மை இனத்தவருடன் ஒற்றுமையாகவே தமது கொடுக்கல், வாங்கல்களையும், வியாபார நடவடிக்கைகளையும் இப் பிரதேசவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சமீப காலமாக சிலரால் இங்கு இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.    

Post a Comment

Previous Post Next Post