சோனகர் வலைத்தளம் மற்றும் லண்டன் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஊடகவியலாளர் இர்பான் இக்பால் வழங்கிய “மெகா அரசியல் களம்” நிகழ்ச்சியில் நேற்று எமது திஹாரிய நியூஸ் இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
இன் நிகழ்ச்சியில் தொலைபேசிமூலம் கலந்து கொண்ட பெரும்பாலான நேயர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சமூகத்தைக் கைவிட்ட நிலையில் தவறான வழியில் வழி நடத்துவதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இன்றைய நிலை தொடர்பாக கருத்து தெரிவித்த பெரும்பாலான அமைச்சர்கள் அரச சார்பு நிலையிலேயே இருப்பதாகவும் சமூகம் தொடர்பான அக்கறையற்று தமது சுக போகங்களுக்காக சமூகத்தை கைவிட்டிருப்பதாகவும் பல நேயர்கள் ஆதங்கப்பட்ட நிலையில், ராஜதந்திரத்துடன் இன்றைய நெருக்கடி நிலையைக் கையாள்வதாகவும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
