பள்ளிவாசலை விட எனக்கு பன்சலையிலேயே மன அமைதி கிடைக்கிறது - பிக்கு சப்ராஸ்

அண்மையில் தலங்கம நாகித்த என்ற பெயரில் பிக்குவாக துறவறம் பூண்ட  மொஹம்மட்  சப்ராஸ் ஆப்தீன் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாவது, சிறுவயதிலிருந்தே நான் பெளத்த மதத்தை மிகவும் நேசித்து வந்தேன். புத்தரின் வாழ்க்கை வரலாறு, ஜாதகக் கதைகள் மற்றும் போதனைகளை நான் அதிகமாக வாசித்திருக்கிறேன். அதன் விளைவாக நான் பெளத்த மதத்தை தழுவினேன்.

மேலும் இது தொடர்பில் அவர்  தெரிவித்துள்ளதாவது,
இஸ்லாத்தில் சட்டங்கள் அதிகம். அதில் கட்டாயம் தொழ வேண்டும் என்றிருக்கிறது. எனினும் பௌத்த மதத்தில்  அப்படியில்லை. சட்டமொன்றினை எங்களுக்கு விதிக்க யாருமில்லை என்பதினால் நான் ஆசையோடும் கெளரவத்துடனும் புத்தரை வணங்கி வழிபடுகிறேன். பன்சலையில் எனக்குக் கிடைக்கும் அமைதி பள்ளிவாசலில் கிடைப்பதில்லை.
எல்லோருடனும் இணைந்து இறைவனை வணங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை.  அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு கட்டாயம் போகவேண்டி ஏற்படுவதால்  அந்நாளில் நான் வீட்டிலிருந்து வெளியேறி வேறு எங்காவது சென்று மாலை வேளையிலேயே வீட்டுக்கு வருவேண்டியிருந்தது.

பன்சலையில் இருக்கும் போது எனக்கு எவ்விதமான கவலையும் இல்லை. மன அமைதிக்கு துறவறம் சிறந்த ஒரு வழியாகும். ஏதேனும் கவலைகள் ஏற்படின் புத்த பெருமானின்  முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் அது மறைந்து விடும் என தெரிவித்துள்ளார்.

2 Comments

  1. "அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்." Quran 3:86

    ReplyDelete
  2. May Almighty Protect us...Ya Allah ..

    ReplyDelete
Previous Post Next Post