மஹரகம புற்று நோய் வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்படவிருந்த பள்ளிவாசலுக்கு தடை !


(ஏ.எம்.எம்.முஸம்மில்)
2003ம் ஆண்டு மஹரகம புற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் “ஹோப்” செயற்திட்டத்திற்கமைய புற்றுநோய் சிகிச்சை தொகுதி ஒன்றை  நிர்மாணிக்க எற்பாடுசெய்யப்பட்டிருந்ததுடன் கிரிகெட் வீரர் மகேல ஜெயவர்தன உற்பட்ட பிரதிநிதிகள் குழுவொன்றினால் அத்திட்டடம் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது. இந் நிர்மாண பணிகளுக்கான இட ஒதுக்கீடாக ஏற்கனவே இங்கே கட்டப்பட்டிருந்த ஓய்வு விடுதிகளும் அகற்றப்பட்டிருந்தது . ஆனாலும் இதுவரை குறிப்பிட்ட பணிகள் ஆரம்பிக்கப் படவில்லை . 

இதற்கிடையில் குறிப்பிட்ட ஹோப் செயற்திட்டதிட்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் “ராசாவி” ………. ? கட்டிடதொகுதி நிர்மாணிக்கப்பட உள்ளதுடன் அதற்கான நிதியை வழங்க லண்டன் மாநகரத்தை மையமாககொண்டு இயங்கும்  முஸ்லிம் தேயிலை நிறுவனமொன்று பொறுப்பேற்றுள்ளது .

குறிப்பிட்ட இந் நிர்மாணப்பணிகளுகாக மஹிந்த ராஜபக்ஷே அவர்களும் அவரின் பாரியாரும் அவர்களின் பெற்றோரகளுக்கு நன்மை சேர்ப்பதற்காக கட்டப்பட்ட கார்ல்டன் வாட்டு தொகுதியையும் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . “மஹரகம  புற்றுநோய் வைத்திய சாலை ஹலால் ஆக்கப்படமாட்டாது” என்று பாதுகாப்பு அமைச்சின் மூலம் சிஹல ராவயவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கடந்த சில தினங்களுக்குமுன் சிஹல ராவய தேசிய அமைப்பு மூலம்  பாதுகாப்பு அமைச்சுடன் நடத்தபட்ட பேச்சுவார்த்தையின் போது, குறிப்பிட்ட நிர்மாண பணிகள் எக்காரணம் கொண்டும் ஆரம்பிக்கப்பட கூடாது என்று வலியுறுத்தப் பட்டது. இதற்கமைய கடந்த ஏழாந் திகதி ஜனாதிபதி பாரியாரின் தலைமையில் நடைபெறவிருந்த  குறிப்பிட்ட கட்டிடத்தின் அடிக்கல் நடு விழா ரத்து செயப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சின் மூலம் 2013 02 03 ந் திகதி சிஹல ராவயவுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி:சிங்கள ராவய கௌரவ பொதுச்செயலாளர் மடிள்ளே பஞஞாசீள.

குறிப்பு: இணையத்தில் சின்ஹல  ராவய வுக்கு நன்றி தெரிவித்துள்ள இச்செய்தியில் பள்ளிவாயல் ஒன்றை கட்டவிருப்பதாக தெளிவாக குறிப்பிடப்  படவில்லை ஆனால் செய்தி தலைப்பில் பள்ளி கட்டுவதற்கு தடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதோ முஸ்லிம் ஒருவரால் கட்டப்படவிருந்த நிர்மாணப் பணி ஒன்று தடுக்கப்பட்டுள்ளது.  'ராசாவி' என்பது எழுத்து பிழையா அல்லது வேறு ஏதேனும் கருத்துண்டா ........... ? அறிந்தவர்கள் எழுதுங்கள்

-அபூ ஷிபா – பதுளை 



சிங்கள இணையத்தில் வெளியான செய்தி:
٠•●මහරගම පිළිකා රෝහලේ ඉදිකිරීමට නියමිතව තිබූ මුස්ලිම් පල්ලිය ඉදිකිරීම නතර කරයි ●•٠·
2003 වසරේදී මෙම ස්‌ථානයේ හෝප් ව්‍යාපෘතිය යටතේ පිළිකා වාට්‌ටු සංකීර්ණයක්‌ ඇතිකිරීමට නියමිතව තිබූ අතර එම ව්‍යාපෘතිය සංවිධානය කරන ලද්දේ ක්‍රිකට්‌ ක්‍රීඩක මහේල ජයවර්ධන මහතා ඇතුළු පිරිසකගේ මූලිකත්වයෙනි. මේ සඳහා ඉඩකඩ ලබාගැනීමට පිළිකා රෝහල සතුව තිබූ හෙද නේවාසිකාගාරයද ඉවත් කරනු ලැබූ අතර මේ වන තෙක්‌ම එම ව්‍යාපෘතිය ක්‍රියාත්මක නොවීය.
හෝප් ව්‍යාපෘතිය සඳහා වෙන් කරන ලද ඉඩමේ, රාසාවි සංකීර්ණය ඉදිකිරීමට නියමිත අතර ඒ සඳහා වන වියදම දරන්නේ ලන්ඩනය මුල්කරගත් මුස්‌ලිම් නාමයක්‌ සහිත තේ සමාගමකි. මෙම ඉදිකිරීම සඳහා ජනාධිපති මහින්ද රාජපක්‍ෂ මහතා හා එම මහත්මිය සිය දෙමව්පියන්ට පිං පතා ඉදිකරන ලද කාල්ටන් වාට්‌ටු සංකීර්ණය ද ඉවත් කිරීමට නියමිතව තිබිණ.

මහරගම පිළිකා රෝහල හලාල් නොකරන බවට ආරක්‍ෂක අමාත්‍යංශයෙන් සිංහල රාවයට සහතික වෙයි. කෙසේ වෙතත් පසුගිය දින සිංහල රාවය ජාතික සංවිධානය විසින් රාජ්‍ය ආරක්‍ෂක අමාත්‍යංශය සමග පැවැත් වූ සාකච්චාවේදී දැඩිව අවධාරණය කර සිටියේ කිසිසේත්ම මෙම ඉදිකිරිම සිදු වීමට ඉඩ නොතබන ලෙසටයි. මේ අනුව 07 වන දින ජනපති ආර්යාවගේ මූලිකත්වයෙන් මුල් ගල් තැබීමට නියමිතව තිබූ එම ඉදිකිරීම සිදු නොකරන බවට අද දින 2013-02-03 නිල වශයෙන් සිංහල රාවය ජාතික සංවිධානය වෙත රාජ්‍ය ආරක්‍ෂක අමාත්‍යංශයෙන් දැනුම් දී ඇත.

විශේෂ ස්තුතිය :- සිංහල රාවය ජාතික සංවිධානයේ ගරු ලේකම් මැඩිල්ලේ පඤ්ඤාලෝක හිමි.

Post a Comment

Previous Post Next Post