(SFM) இலங்கையில் காணப்படுகின்ற சிறிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று, சிங்கள அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா தெரிவித்துள்ளது.அதன் செயலாளர் கலுகொடத்த ஞானசார இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறு கட்சிகள் பல்வேறு கொள்கைகளை கொண்டுள்ளன. இதனால் நாட்டின் தேசியத்துவத்தை ஏற்படுத்த முடியாதவாறு, பிரிவினைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் சிறு கட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒரே தேசிய கட்சி ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அது வரவேற்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த கருத்தினை தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் எம்.முஸாமில் நிராகரித்துள்ளார். இலங்கையில் பல்வேறு சிறு கட்சிகள் காணப்படுகிறது. உதாரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு விடயங்கள் தொடர்பில் போராடி வருகிறது.
எனினும் நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயக உரிமைக்கு இது ஒரு சிறந்த உதாரணம். அவர்களின் கொள்கையை காரணம் காட்டி, கட்சியை தடை செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
