உலமா சபை - கோதபாய ராஜ­பக்­ஷ இன்று சந்­திப்பு



ஜம்­இய்­யதுல் உலமா சபை பிர­தி­நி­தி­க­­ளு­க்கும் பாது­காப்­புச் செய­லாளர்   கோதபாய ராஜ­பக்­ஷ­வுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு ஒன்று இன்று பிற்­பகல் பாதுகாப்பு அமைச்சில் இடம்­பெ­ற­வுள்­ள­து.

பிற்­பகல் 2.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்ள இச் சந்­திப்பில் ஹலால் விவ­காரம் தொடர்பில் ஏற்­பட்­டுள்ள இழு­பறி நிலைக்கு தீர்­வு காண்­பது தொடர்பில் ஆராயப்­ப­ட­வுள்­ள­து.

இச் சந்­திப்பில்  பௌத்த பிக்­குகள் சிலரும் பங்­கேற்­க­­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
சில வாரங்­க­ளுக்கு முன்னர் இதே­போன்று உலமா சபையை சந்­தித்துப் பேச்சு நடத்­திய பாது­காப்புச் செய­லா­ளர், முஸ்­லி­ம்­க­ளுக்கு மாத்­திரம் ஹலால் உற்பத்­தி­களை வழங்கும் வகையில் பொறி­மு­றை ஒன்றை வகுக்­கு­மாறு ஆலோசனை வழங்­கி­யி­ருந்தார். அத­­னை­ய­டுத்து முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் ஹலால் உற்­பத்­தி­களை வழங்­கு­மாறும் முஸ்­லி­மல்­லா­தோ­ருக்­கான உற்பத்தி­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் அவ­சி­ய­மில்லை எனவும் உலமா சபை அறிவித்­தி­ருந்­தது.

Post a Comment

Previous Post Next Post