கொழும்பில் இன்று 04-03-2013 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் "இனிமேல் இன்நாட்டின் உத்தியோகபூர்வமற்ற பொலிஸ்காரர் நாங்கள் தான்" என பகிரங்கமாக அறிவித்தார்.
மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாடி வீடொன்றில் தேரர் ஒருவரின் பெயரை உபயோகித்து மோசடியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்து நாம் அமைப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்தோம். பொறுப்பு வாய்ந்தவர்கள் இதனை செய்யாவிட்டால் எங்களைப் போன்ற சமூக உணர்வுள்ளவர்கள் செய்ய வேண்டியது அவசியம் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடல் ஒன்றின் போது இராணுவ உயர் அதிகாரி ஒருவர் "நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதியை நிலைநாட்ட இராணுவமும், பொலிசாரும் உள்ள நிலையில் நீங்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என பொதுபல சேனா அமைப்புக்கு எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
