(SFM) ஹலால் சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கும் உலமாக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் காரணமாக தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் அஷீஸ் நிசார்தீன் இதனை தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழ் தொடர்பாக அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பு கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு மாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திடம் முறையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
