ஹலால் சான்றிதழ் இல்லாவிட்டாலும், பொருட்களின் விலை குறையாது: வர்த்தக சம்மேளனம்


(TM) பொருட்களின் விலையேற்றத்திற்கும் ஹலால் சான்றுக்கும் இடையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை 

ஹலால் சான்றிதழ் இலவசமாக வழங்கப்பட்டாலும் பொருட்களின் விலைகளில் குறைவு ஏற்படமாட்டது என இலங்கை வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது.

உற்பத்தி பொருட்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்படுகின்ற ஹலால் சான்றிதழ்களினை பெறுவதனாலே பொருட்களுக்கு அதிக விலை என பொது பல சேன அமைப்பு முன்னர் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், 'இலவசமாக ஹலால் சான்றிதழ்களை வழங்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முன்வந்துள்ளமையினால் உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போதே பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சுதந்த ரத்னாயக்க தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ்களுக்கு குறைந்தளவிலான கட்டணமே அறவிடப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இதனால் பொருட்களின் விலையேற்றத்திற்கும் ஹலால் சான்றுக்கும் இடையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை என வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்தார்.

ஹலால் சான்றிதழை விட ISO  உள்ளிட்ட பல தரச் சான்றிதழ்களை பெறுவதற்கு உற்பத்தியாளர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் இலவசமாக ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டாலும் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்பாடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post