(TM) ஹலால் சான்றிதழ் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்தாலும் எமது இலக்னை நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என பொது பல சேனா தெரிவித்துள்ளது.
ஹலால் விவகாரத்தில் நாங்கள் வெற்றிபெற்று விட்டோம். அடுத்தடுத்த விவகாரங்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
எமது அடுத்த போராட்டம் இம்மாதம் 31ஆம் திகதி முன்னர் ஆரம்பமாகும். கண்டியில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
"இது ஒரு பெளத்த நாடு. பெளத்தர்கள் ஹலால் உண்ணத் தேவையில்லை. அதேபோல . முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவிற்கு எதிராக விரைவில் போர்க்கொடி தூக்குவோம்" என கிரம விமலஜோதி தேரர் மேலும் தெரிவித்தார்.

Dear , ஒரு எதிரியை தாக்குவதற்கும், வீழ்த்துவதற்கும், ஒரு சரியான கட்டமைக்கப்பட்ட திட்டம் தேவை . திட்டமிட்டு தாக்குவதென்பது எதிரியை நேருக்கு நேர் தாக்குவது / சுற்றி வளைத்து தாக்குவது / ஆயுதங்களால் தாக்குவது / கருத்துக்களால் வீழ்த்துவது / அவசரமாக வீழ்த்துவது / பொறுத்திருந்து வீழ்த்துவது / எமது வலையில் அவர்களை வீழ்த்துவது / அவர்கள் வலையில் அவர்களையே வீழ்த்துவது , இப்படி நிறைய விடயங்களை ஆராய்ந்து தக்க தருணத்தில் புத்தி சாதுரியமாய் அவசரபடாமல் நிதானமாய் வீழ்த்த வேண்டும் /
ReplyDeleteஜம்மியத்துல் உலமா சபை எடுத்த முடிவு சரியே / ஜம்மியத்துல் உலமாவையும் முஸ்லிம் மக்களையும் பிரிக்க சதி நடக்கிறது . யாரும் ஏமாந்து விட வேண்டாம் .
ஒரு சமூகத்தை/இனத்தை வீழ்த்தி சின்னாபின்னமாக்கி , அழித்தொழிப்பதற்கு செய்ய வேண்டியது, அச்சமூகத்திலுள்ள 1. பொருளாதரத்தை வீழ்த்துவது 2. அறிவாளிகள், புத்திஜீவிகளை அழிப்பது 3. சமய / மார்க்க போதகர்கள் / உலமாக்களுக்கும் , மக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை இல்லாதொழிப்பது 4. அதிகாரமில்லாத சக்தி குறைந்த அறிவிலி அரசியல்வாதிகளை அச்சமூகத்திற்கு பொறுப்பலர்களாக மாற்றுவது 5. அச்சமூகதிட்கு அச்சத்தை ஏற்படுத்தி , வீரமற்றவர்களாக மாற்றுவது . 6. இறைவனுக்கும் ,மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பது..
இவைகள் செயல்வடிவம் பெறும்போது அச்சமூகம் இருப்பிடம் தெரியாமல் அழிந்து விடும் . இப்போதைக்கு எமது முஸ்லிம்களின் தலைமை பீடம் உலமாக்களும் , புத்தி ஜீவிகளும் நிறைந்த அமைப்பு ஜம்மியத்துல் உலமா சபையும் , ஏனைய இஸ்லாமிய உலமா அமைப்புகளும் மட்டுமே, இவ்வமைப்புகளுக்கு முஸ்லிம்களாகிய நாம் போதிய பலம் சேர்க்க வேண்டும், பிரிந்து நின்று செயற்படாமல், ஒற்றுமையை பற்றிப் பிடிப்போம் அமீன் ....