ஹலால் சான்றிதழை அரசு தடை செய்ய வேண்டும். இல்லாவிடின் உலமா சபை அதனை வாபஸ் பெறவேண்டும். இதில் ஹெல உறுமய மூக்கை நுழைப்பதை நாம் விரும்பவில்லை, நாம் ஹலால் சான்றிதழை தொடர்பாக வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் ஹலால் சான்றிதழ் இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என பொது பல சேனா கூறியுள்ளது.
ஹலால் சான்றிதழ் தொடர்பாக ஜாதிக ஹெல உருமயவும் பொது பல சேனாவும் தனித்தனியான தீவிர பிரச்சாரம் செய்துவருகின்றது. இன் நிலையிலேயே பொது பல சேனா ஜாதிக ஹெல உருமயவிற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
