மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மஹர பிரதேசத்தின் பள்ளிவாசல் மீது இன்று காலை இனம்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை அடுத்து பள்ளிவாசலை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிசாருடன் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைந்து பள்ளிவாசல் பாதுகாப்புக் கடமையில் தற்சமயம் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பள்ளிவாசல் வளாகத்துக்குள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவரும் அனுமதிக்காத்து காவல்துறையினர் தற்சமயம் அங்கு பாதுகாப்பினை பலப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இன்று காலை மேட்கொள்ளப்பட்டுள்ள குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்; இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கிறது.
இதனிடையே நேற்றைய தினம் மாலை வேளை பலாங்கொட, ஓப்பநாயக்க பள்ளிவாசல்மீதும் இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தற்போது சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் அதனுடன் சம்பந்தப்பட்ட எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி : விடிவெள்ளி
மஹர பள்ளிவாசலில் வரையப்பட்டிருந்த பன்றியின் உருவம்

