பொது பல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை!– அஸ்கிரிய பீடம்

(TW) பொதுபல சேனாவுக்கு எதிராக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுமானால், அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர் எச்சரித்துள்ளார்.

பொதுபல சேனாவின் சில நடவடிக்கைகளை அஸ்கிரிய பீடத்தினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மதிப்புக்குரிய ஆனமடுவ தர்மதாஸ தெரிவித்துள்ளார். பொது பல சேனா அமைப்பினர் சில இடங்களில் சட்டத்தை கையில் எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இதனை தவிர்த்து அவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பதிவாளர் கோரியுள்ளார்.

இந்தநிலையில் பொது பல சேனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் இருந்தால், சங்க சபைக்கு முறைப்பாடு செய்யமுடியும் என்றும் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கேட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post