இலங்கைத் தூதரகம் முற்றுகை: வைகோ கைது!

இலங்கைத் தூதரக முற்றுகை: வைகோ கைது!மனித உரிமை மீறல் குற்றம் புரிந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் இலங்கைத் தூதரக முற்றுகையில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  உள்ளிட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின போது மஹிந்த ராஜபக்ஷவின் பொம்மை ஒன்றை மதிமுக வினர் தீவைத்து கொளுத்தினர். இதன் பிறகு, இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற வைகோ உட்பட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

Post a Comment

Previous Post Next Post