U.C.M.C. மூலம் நடாத்த பட்ட புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான மாபெரும் கருத்தரங்கு-படங்கள்

(எ.எம்.எம். முஸம்மில்)
மலையக முஸ்லிம் மாநாட்டின் (U.C.M.C.) மூலம் 2013  தரம் ஐந்து புலமை பரீட்சை   மாணவர்களுக்கான செயட்பாட்டுமுறை  கருத்தரங்கொன்றை மிகசிறப்பாக ப/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் எட்பாடுசெய்யப்பட்டிருந்தது. 

இக்கருத்தரங்கில் பதுளை , பசறை, லுணுகலை,பண்டரவலை,தியத்தலாவை, கல உட  ஆகிய பிரதேசங்களின் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர் . முற்றிலும் வித்தியாசமான பல அணுகுமுறைகளுடன் செயற்பாட்டு முறையிலான இக்கருத்தரங்கில் ப / பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பத்துபேரும், கல உட பிரபல புலமைபரீட்சை ஆசிரியர் எம் ஹுசைன் அவர்களும் வளவாளர்களாக பங்குபற்றினர் . 

ப /  பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் எம் ஏ ஹைருன் நிஸா அவர்களின் வரவேற்புரையை அடுத்து ,  பதுளை கோட்ட  கல்வி காரியாலய பணிப்பாளர் திரு ஜெயதிலக அவர்கள் இக்கருத்தரங்கை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் .




Post a Comment

Previous Post Next Post