ஹிஜ்ரி 1433 முஹர்ரம் புதுவருடத்தை வரவேற்கும் முகமாக "முஹர்ரம் கலை விழா"



ஹிஜ்ரி 1433 முஹர்ரம் மாதத்தை வரவேற்கும் முகமாக திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ழா அஹதிய்யா பாடசாலை ஏற்பாடு செய்த "முஹர்ரம் கலை விழா" கடந்த 27 ஆம் திகதி மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசலுக்கு முன்னாள் நடைபெற்றது 

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக உறுப்பினர் அல் ஹாஜ் டாக்டர் எம். என்.எம். அஸீம் அவர்களும், சிறப்பு அதிதியாக அல் - அஸ்ஹர் மத்திய கல்லுரி அதிபர் ஜனாப் எம். டி.எம். தௌஸீர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விஷேட அதிதிகளாக பேராதெனிய பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எஸ் அப்துல் பாரி, சபீலூர் ரசாத் அரபுக்கல்லூரி உப அதிபர் அல் ஹாஜ் மௌலவி எ.எம்.எம் அம்ஜத்,  மஸ்ஜிதுல் ரவ்ழா பெரிய பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் எம்.எம்.எம் புவாட், கம்பஹா மாவட்ட அஹதிய்யா சங்கத்தின் செயலாளர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம் . முபாரக், கம்பஹா மாவட்ட காதி நீதவான் எம். டி.எம் மன்சூர், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான ஜனாப் குஜி ஹனீபா, ஜனாப் முகம்மட் அஷ்ரப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்வில் முஹர்ரம் கலை விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்சிகளில் வெற்றியீற்றிய மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டதுடன்,  அஹதிய்யா பாடசாலை மாணவா மாணவியரின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன. 














Post a Comment

Previous Post Next Post