திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஊர் மக்கள் இணைந்து பாடசாலை அபிவிருத்திக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதற்கான ஒன்றுகூடல்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றது. இக் கூட்டத்தின்போது பாடசாலையின் நலனைக் கருத்தில் கொண்டு பாடசாலை அபிவிருத்திக்கான இரு குழுக்கள் நியமிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்திக் குழுச் செயலாளராக ஜனாப் ராஸிக் அவர்களும் பாடசாலை பௌதீக வள அபிவிருத்திக் குழுச் செயலாளராக அப்துர் ரஹீம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் .
இக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று 03-12-2011 திகதி இரவு பாடசாலை கணினிக்கூடத்தில் இடம்பெற்றது, இக் கூட்டத்தில் பாடசாலை நலன் விரும்பிகள் பலர் கலந்துகொண்டனர். இதன் போது எதிர்வரும் 18ம் திகதி பாடசாலை பாதை யாத்திரை (Al-Azhar Walk) ஒன்றை நடாத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதுடன், அதற்கான ஏற்பாட்டுக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
Tags
திஹாரிய செய்திகள்
