இந்தியா பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6


இந்தியா பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் திகதி அன்று, ஆண்டு தோறும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாளை டிசம்பர் 6ஆம் திகதியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். 

சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராய நகர், பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் பயணிகள் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. 

Post a Comment

Previous Post Next Post