தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது பொது பஸ் போக்குவரத்து சேவை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் ஏற்பாட்டில் மஹரகம பஸ் நிலையத்தில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்து கொண்ட போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, பஸ் சேவையை ஆரம்பித்து வைத்து பஸ்ஸை செலுத்திச் சென்றார்.
நன்றி : உள்ளூர் ஊடகங்கள்



