பாகிஸ்தான் பிரீமியர் லீக் (PPL) விரைவில் ....


IPL ஐ போன்று பாகிஸ்தானிலும், 'பாகிஸ்தான் பிரீமியர் லீக்' கிரிக்கெட் தொடர் தொடங்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சாகா அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'பாகிஸ்தான் பிரீமியர் லீக்' கிரிக்கெட் தொடரை நடத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளது. எனவே இது குறித்து பாகிஸ்தான் அதிபர் அசீப் அலி சர்தாரியிடம் அனுமதி பெற விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

மேலும் IPL போட்டி நடைபெறும் முன்பே பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் IPL மிகவும் பிரபலம் இதன் மூலம் பல வருவாய் கிடைப்பதை கருத்தில் கொண்டு பாகிஸ்தானும் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது.

மேலும் இதில் ஒரு அணியை ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் விலைக்கு வாங்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Post a Comment

Previous Post Next Post