சாம்சுங் அறிமுகப் படுத்தும் 3G வசதியுடன் கூடிய கேலக்ஸி கேமரா.


3 ஜி வசதியுடன் கூடிய நவீன கேலக்ஸி கேமராவை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை நேரடியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய முடியும்.

இந்த கேமராவில் ஆண்ட்ராய்ட் 4.1 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 16 மெகா பிக்சல் அளவு துல்லியமாக படம் பிடிக்கலாம். மேலும், புளுடூத் வசதியும் உள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த புதிய 3-ஜி கேமராவில் உண்டு. அதேநேரம் கோல் வசதி இந்த கேலக்ஸி கேமராவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 காட்சிகளை படம் பிடிப்பதில் ஆர்வமுள்ளவர்களை குறிவைத்து இந்த புதிய கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் முதல் ஆண்டிலேயே பல லட்சம் கேமராக்கள் விற்பனை ஆகும் என  சாம்சுங் நிறுவனம்  எதிர்பார்க்கிறது.




Post a Comment

Previous Post Next Post