திஹாரிய யூத் இன் சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி


திஹாரிய யூத் ஏற்பாட்டில் சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி ஒன்று நேற்று (27-11-2012) திஹாரிய அல்- அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் முதல் போட்டியாக திஹாரிய யூத் மற்றும் கொழும்பு ஸாஹிரா அணிகள் பங்குபற்றிய போட்டி அமைந்திருந்தது. இப்போட்டியில் இரு அணிகளும் இரு கோல்கள் வீதம் பெற்றுக்கொண்டதால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

இரண்டாவது போட்டியாக அமைந்த திஹாரிய யூத் "40 வயதிற்கு மேற்பட்டவர்கள்" கொழும்பு ஸாஹிரா "40 வயதிற்கு மேற்பட்டவர்கள்" போட்டி பார்வையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்ற போட்டியாக அமைந்திருந்தது.

இப்போட்டியில் கொழும்பு ஸாஹிரா "40 வயதிற்கு மேற்பட்டவர்கள்"  4 கோல்களையும், திஹாரிய யூத் "40 வயதிற்கு மேற்பட்டவர்கள்" அணி 3 கோல்களையும் பெற்றுக்கொண்டது. மேலதிக ஒரு கோலால் கொழும்பு ஸாஹிரா "40 வயதிற்கு மேற்பட்டவர்கள்" அணி வெற்றியடைந்தது 





Post a Comment

Previous Post Next Post