திஹாரியில் நடைபெற்ற இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 5 நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை பூர்த்தி (படங்கள்)

இலங்கையில் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் கல்வி மற்றும் ஒழுக்க விடயங்களில் ஒரு புதிய பரிணாமத்தை கொண்டுவரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின்   (ஜம்மியதுல் தலபாவின் ) ஏற்பாட்டில் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காண ஐந்து நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை இம்முறையும் இலங்கையில் பல பாகங்களிலும் நடைபெற்றது.

இதன் ஒரு கட்டமாக திஹாரிய ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள தன்வீர் அகடமியிலும் கடந்த டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஐந்து நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் திஹாரிய கிளை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் A.A.A. அப்ராஸ் அவர்களில் தலைமையில் நடைபெற்றது.

வதிவிட பட்டறையின் இறுதி நாள் நிகழ்வின் பிரதான நிகழ்வான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28 -12-2012 வெள்ளிக்கிழமை தன்வீர் அகடமியில் நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதிகளாக திஹாரிய அல்- அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபர் ஜனாப் M.T.M. தௌவ்சீர் அவர்களும், விஷேட அதிதியாக ஸ்ரீலங்கா தன்வீர் அகடமியின்  செயலாளர் ஜனாப் அன்ஸார் மாஸ்டர் அவர்களும்,  ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் திஹாரிய கிளை உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் ஐந்து நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வானது நாடளாவியரீதியில் 20 இடங்களில் 1000 மாணவர்களுக்கு நடைபெற்றது.

படங்கள் - J - Media












Post a Comment

Previous Post Next Post