தெஹிவள சரணங்கர வீதியில் முஸ்லிம் சகோதரர் ஒருவர் கடந்தவாரம் "பேக்கர் ஹட்"' கடையொன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த கடைக்கு அருகில் பௌத்த விகாரை ஒன்றும் சாராயக் கடையொன்றும் காணப்படுகின்றது.
என்றாலும் முஸ்லிம் சகோதரரால் ஆரம்பிக்கப்பட்ட "பேக்கர் ஹட்"' கடைக்குச்சென்ற பௌத்த பிக்குகள் உடனடியாக கடையை மூடிவிடுமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதையடுத்து அந்த முஸ்லிம் சகோதரர் தான் ஆரம்பித்த அந்த கடையை மூடியுள்ளார்.
பௌத்த விகாரைக்கு அருகில் உள்ள சாராயக் கடை பௌத்த தேரர்களின் எந்தவித அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
