ஒரே சூலில் மூன்று குழந்தைகளைப் பெற்ற தமிழ்த் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணிக்கான உறுதியை முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று வழங்கினார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று நோன்மதி தினத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இம்மாதம் 10 ஆம் திகதி கண்டி ஆஸ்பத்திரியில் இக்குழந்தைகள் பிறந்தன. இக்குடும்பத்தினர் வசதிகள் குறைந்த சிறிய வீடு ஒன்றில் வாழ்வதாக ஊடகங்ளில் செய்தி வெளியானதை அடுத்தே அவர்களுக்கு வசதியான புதிய வீடு ஒன்று இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது.

