தனியார் பஸ்களில் பயணம் செல்வதற்காக டிக்கட்டிற்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்தும் புதிய நடை முறை ஜனவரி நடுப்பகுதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது. முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மொரட்டுவ மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களினூடாக முன்னெடுக்கப்பட்டதோடு இது தொடர்பான கொடுக்கல் வாங்கல் மத்திய வங்கியின் அனுமதியுள்ள வங்கி அல்லது நிதி நிறுவனத்தினூடாக மேற்கொள்ளப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.
புதிய திட்டத்தினூடாக பஸ் உரிமையாளர்களும் பயணிகளும் நன்மையடைய உள்ளனர். பஸ் உரிமையாளர்களின் வருமானம் பாதுகாக் கப்படுவதோடு சாரதிகளும் நடத்துநர்களும் நிதி மோசடி செய்வது தடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எஞ்சிய சில்லறை பணத்தை வழங்காத பிரச்சினை இனி எழாது எனவும் அவர் தெரிவித்தார்.
தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைபோன்று இதனை பயன்படுத்த முடியும் எனவும் இந்த அட்டை மீளப்பயன்படுத்தக் கூடியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி: தினகரன்
