களுபோவில போதனா வைத்தியசாலையில் வழங்கப்பட்ட க்லொக்சசிலின் என்ற ஊசி மருந்து குப்பியில் இருந்து கண்ணாடித்தூள்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச தாதியர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைத்தியசாலையின் வைத்தியத்தரப்புக்கு தெரியப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த குப்பியில் இருந்து கண்ணாடித்தூள்கள் மீட்கப்பட்டுள்ளன.
உடனடியாக இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு களுபோவில வைத்தியசாலையை தொடர்பு கொண்டு வினவிய போது, இந்த மருந்து குப்பிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
