லங்கா முஸ்லிம் ஜனாஸா சங்கத்தின் விழிப்புணர்வுக் கருத்தரங்கு திஹாரியில்.


திடீர் மரணம் நிகழும் போது மரணித்த முஸ்லிம்களின்  ஜனாஸாக்களை வைத்தியசாலையில் இருந்து பெறும் சந்தர்ப்பங்களில்  மரண விசாரணைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கையாளவேண்டிய விதிமுறைகள் மற்றும் இலகுவாக ஜனாஸாக்களை பெற்றுகொள்வதில் உள்ள சிரமங்களைத்  தவிர்த்தல், ஜனாஸாக்கள் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள், அமைச்சின் சுற்றறிக்கைகள் பற்றிய விபரங்கள், மற்றும் ஏனைய ஒழுங்கு விதிமுறைகள் பற்றிய விஷேட கருத்தரங்கு ஒன்று இன்று காலை திஹாரிய ஊர்மனை மஸ்ஜிதுல் ரவ்ழா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஸ்ஜிதுல் ரவ்ழா பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கை லங்கா முஸ்லிம் ஜனாஸா சங்கத்தின் தேசிய தலைவர் Dr. M.M.N. முஸ்னி (JP) அவர்கள் நடத்திவைத்தார். இக்கருத்தரங்கில் திஹாரியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களினதும் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post