சிவப்பு மழையில் உயிரினம் கண்டுபிடிப்பு! மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? இல்லையா? கண்டறியப்படவில்லை

(TM) நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் சிவப்பு மழைக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மழை நீரில் கலந்திருக்கும் ஒருவகை உயிரினமே இந்த சிவப்பு மழைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்தார்.

மேற்படி உயிரிணங்கள் ஒருகல உயிர் அங்கிகள் இனத்தைச் சேர்ந்தவை என்று சுட்டிக்காட்டிய டாக்டர் சமரநாயக்க, இவை மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட உயிவாழ்வனவாக இருப்பதுடன் பெருக்கமடையும் தன்மையையும் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இவை குறித்த தமது அனுமானங்களை உறுதி செய்ய அவற்றை டி.என்.ஏ (மரபணு பரிசோதனை) மற்றும் ஆர்.என்.ஏ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் இந்த சோதனைகளுக்காக பிரித்தானியாவிலுள்ள கார்டிவ் பல்கலைக்கழகத்துக்கு சிவப்பு மழை நீர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

குறித்த பல்கலைக்கழகம் ஏற்கனவே, கேரளாவில் பெய்த சிவப்பு மழையை ஆராய்ந்து வருவதாகவும் இருந்தபோதிலும், இந்த சிவப்பு மழை மனிதனுக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா, இல்லையா என்பது குறித்துஇன்னும் கண்டறியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த சிவப்பு மழையால் இதுவரை எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், இறுதி முடிவுகள் வரும்வரை இதனால் பாதிப்பு ஏற்படுமா என்பதை கூறமுடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post