இலங்கையின் மிகப் பெரிய அனைத்து வசதிகளுடன் கூடிய காற்பந்து வளாகம் மற்றும் மைதானம் யாழ்ப்பாணத்தின் கைத்தடி பிரதேசத்தில் அமைக்கப்படுகின்றது. 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ் வளாகத்திற்கு மேற்கு ஜேர்மன் குடியரசு மற்றும் உலக காற்பந்து சம்மேளம் ஆகியன நிதியுதவி அளித்துள்ளன. கட்டத்தொகுதியன் நிர்மாணப்பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, மைதானத்தின் நிர்மாணப்பணிகள் எஞ்சியுள்ளன.
இவ் விளையாட்டு வளாகமானது, அமைச்சர் டக்லஸ் தேவானந்தவால் மேற்கு ஜேர்மன் குடியரசிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் முகாமைத்துவம் அரியாலை காற்பந்து விளையாட்டு கழத்திற்கு வழங்கப்படவுள்ளது.
கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்ய அமைச்சர் டக்லஸ் தேவானந்தா விஜயம் செய்துள்ளார். இதன்போது நாட்டில் உள்ள அனைத்து காற்பந்து வீரர்களுக்கும் இது ஓர் சிறந்த மைதானமாக விளங்கும் அதேவேளை சர்வதேச தரத்திற்கு வடக்கு காற்பந்து வீரர்களின் தரத்தை உயர்த இம் மைதானம் பெரிதும் வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
